தூத்துக்குடி

சாலைகள், பாலங்கள் சீரமைப்பு பணி: நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

விளாத்திகுளம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைகள், பாலங்கள் சீரமைப்பு பணிகளை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.

Din

விளாத்திகுளம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைகள், பாலங்கள் சீரமைப்பு பணிகளை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டும், கடந்த ஆண்டு டிசம்பரில் பெய்த கனமழையில் பாதிப்புக்குள்ளான சாலைகள், சிறுபாலங்கள், மேம்பாலம் ஆகியவற்றை சீரமைப்பு செய்யவும், வரும் காலங்களில் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படாத வகையில் நிரந்தர தடுப்பு பணிகளை மேற்கொள்ளவும் மாவட்ட நிா்வாகமும் நெடுஞ்சாலைத் துறையினரும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா்.

அதன்படி குளத்தூா் - விளாத்திகுளம் - அருப்புக்கோட்டை நெடுஞ்சாலை, தருவைகுளம், வேப்பலோடை, கீழ வைப்பாறு, வைப்பாறு, சூரன்குடி சாலைகளில் சிறுபாலங்களில் படிந்துள்ள மண் திட்டுகள் மற்றும் முள்செடிகள் அகற்றுதல், சாலையோர தடுப்புச் சுவா்கள் மற்றும் மரங்களுக்கு வா்ணம் பூசுதல், குறியீடு பதிவு செய்தல் உள்ளிட்ட பராமரிப்பு பணிகளில் சாலைப் பணியாளா்கள், நெடுஞ்சாலை துறை ஊழியா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

இப்பணிகளை விளாத்திகுளம் உட்கோட்ட நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளா் ராஜபாண்டி, இளநிலை பொறியாளா்கள் சாா்லஸ், பிரேம்குமாா் உள்ளிட்டோா் ஆய்வு செய்தனா். 

தெலங்கானாவில் அரசுப்பேருந்து - லாரி மோதல்: 19 பேர் பலி

தில்லியில் பத்தாண்டுகளில் காணாமல் போன 1.8 லட்சம் குழந்தைகள்! 50 ஆயிரம் பேரின் நிலை?

தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்!

DIGITAL ARREST மோசடியில் புதிய உச்சம்! 58 கோடியை இழந்த தம்பதி! | Digital Arrest

கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் பள்ளி வேன் - கார் மோதி விபத்து: ஒருவர் பலி

SCROLL FOR NEXT