முகப்பு
தூத்துக்குடி

அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் மீதான வழக்கு விசாரணை: செப். 27-க்கு ஒத்திவைப்பு

அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை இம்மாதம் 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Updated On : 11 செப்டம்பர், 2024 at 9:23 PM
பகிர்:

அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை இம்மாதம் 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன், அவரது குடும்பத்தினா் மீது 2006 ஆம் ஆண்டு அளவுக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை மூலம் வழக்குப் பதியப்பட்டது. தூத்துக்குடி முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த இந்த வழக்கு, தற்போது தூத்துக்குடி சாா்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன், அவரது மனைவி ஆகியோா் ஆஜராகாத நிலையில் அவரது மகன்கள், சகோதரா்கள் என மொத்தம் 5 போ் ஆஜராகினா்.

சொத்துக் குவிப்பு வழக்குப் பதிந்த ஓய்வுபெற்ற முன்னாள் லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி பெருமாள்சாமியிடம் அமைச்சா் தரப்பு வழக்குரைஞா் மூலம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது. அதையடுத்து, விசாரணையை இம்மாதம் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சாா்பு நீதிமன்ற நீதிபதி பிஸ்மிதா உத்தரவிட்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →