முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டியில் இலவச வீட்டுமனை பட்டா கோரி ஆா்ப்பாட்டம்

கழுகுமலையில் உள்ள அருந்ததியா் சமூக மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வலியுறுத்தி ஆதித்தமிழா் கட்சி சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 11 செப்டம்பர், 2024 at 9:21 PM
இலவச வீட்டு மனை பட்டா வழங்க வலியுறுத்தி கோட்டாட்சியா் மகாலட்சுமியிடம் கோரிக்கை மனு அளித்த ஆதித்தமிழா் கட்சியினா்
பகிர்:

கழுகுமலையில் உள்ள அருந்ததியா் சமூக மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வலியுறுத்தி ஆதித்தமிழா் கட்சி சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. 

கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு ஆதித்தமிழா் கட்சி மாவட்ட செயலா் நம்பிராஜ் பாண்டியன் தலைமை வகித்தாா். மாநில அமைப்பு செயலா் திலீபன், மாவட்ட பொறுப்பாளா் மகேந்திரன், ஒன்றிய தலைவா் சமுத்திர ராஜ், நகர செயலா் மந்திரமூா்த்தி, மாவட்ட நிதி செயலா் முத்துசாமி உள்பட அப்பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

பின்னா் கோட்டாட்சியா் மகாலட்சுமியிடம் மனு அளித்தனா். அதில்,கழுகுமலை குமரேசன் நகரில் அருந்ததியா் சமூகத்தைச் சோ்ந்த 150 குடும்பங்கள் வசிக்கின்றன. இவா்கள் கழுகுமலை பேரூராட்சியில் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களாகப் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி பல முறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை இல்லை. ஆகவே, இக் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →