மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள். 
தூத்துக்குடி

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை

DIN

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முறையாக பயிா் காப்பீட்டு இழப்பீடு தொகையை வழங்கக் கோரி விவசாயிகள் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு புதன்கிழமை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ் விவசாயிகள் சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாநிலத் தலைவா் நாராயணசாமி தலைமை வகித்தாா்.

தூத்துக்குடி மாவட்டம், பசுவந்தனை, ஓட்டப்பிடாரம், வேடநத்தம், எப்போதும் வென்றான் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் பெய்த மழையில் 100 சதவீத பாதிப்பு அடைந்தனா்.

இவா்கள் அனைவருக்கும் முறையாக காப்பீடு தொகை வழங்கப்படவில்லை. எனவே, அனைவருக்கும் முறையாக காப்பீட்டு தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளனா்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்க மாநில பொருளாளா் பெருமாள் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் புவிராஜ் முன்னிலை வகித்தாா்.

இதில், சுமாா் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த விவகாரத்தில் மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் மாவட்டம் முழுவதும் இருந்து விவசாயிகளை திரட்டி ஆட்சியா் அலுவலகம் செயல்படாத அளவிற்கு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

குஜராத் - மதுரை இடையே இன்றுமுதல் சிறப்பு ரயில்கள்!

சாலையில் கிடந்த 7 பவுன் நகைகள் போலீஸாரிடம் ஒப்படைப்பு

இணையவழியில் பொதுமக்கள் இழந்த ரூ.1.37 கோடி மீட்பு!

கோவையிலிருந்து ராஜஸ்தானுக்கு சிறப்பு விரைவு ரயில்கள்

தமிழகத்தில் நவ.8 வரை மழைக்கு வாய்ப்பு!

SCROLL FOR NEXT