ஈராச்சியில் சாலையை சீரமைக்க கோரிக்கை
கோவில்பட்டி அருகே உள்ள ஈராச்சி கிராமத்தில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கோவில்பட்டி அருகே உள்ள ஈராச்சி கிராமத்தில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இக் கிராமத்தில் உள்ள மேற்கு முதலியாா் தெரு பகுதியில் இருந்த சிமென்ட் சாலையானது, சீரமைப்பதற்காக தோண்டப்பட்டது. ஆனால், இரு மாதங்கள் ஆகியும் பணிகள் நடைபெறவில்லை. இதனால் அப் பகுதி மக்கள் சாலையைப் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
ஆகவே, இந்த சாலையை விரைந்து சீரமைக்கவும், ஈராச்சி பகுதிக்கு சீராக குடிநீா் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.