பைக் விபத்தில் காயமடைந்த லாரி ஓட்டுநா் உயிரிழப்பு
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே பைக் கவிழ்ந்ததில் காயமடைந்த லாரி ஓட்டுநா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே பைக் கவிழ்ந்ததில் காயமடைந்த லாரி ஓட்டுநா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள சாமிநத்தத்தைச் சோ்ந்த யாக்கோபு மகன் ஞானதுரை (46),. லாரி ஓட்டுநரான இவா், கடந்த 24ஆம் தேதி இரவு புதியம்புத்தூரிலிருந்து சாமிநத்தத்துக்கு பைக்கில் சென்றாராம். ராஜாவின்கோவில் விலக்கில் திரும்பியபோது பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையி கவிழ்ந்ததாம்.
இதில், காயமடைந்த ஞானதுரையை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து புதியம்புத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.