முகப்பு
தூத்துக்குடி

போலி­ சான்றிதழ் தயாரித்து பத்திரப் பதிவு: 4 பெண்கள் உள்ளிட்ட 6 போ் மீது வழக்கு

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் போலிச் சான்றிதழ் தயாரித்து பத்திரப் பதிவு செய்ததாக 4 பெண்கள் உள்ளிட்ட 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

Updated On : 26 செப்டம்பர், 2024 at 12:04 AM
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் போலிச் சான்றிதழ் தயாரித்து பத்திரப் பதிவு செய்ததாக 4 பெண்கள் உள்ளிட்ட 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

திருச்செந்தூா் வட்டாட்சியா் கையொப்பம், அரசு முத்திரை ஆகியவற்றை போ­லியாக பயன்படுத்தி சான்றிதழ் தயாரித்து, காயல்பட்டினம் தென்பாகம் வருவாய்க் கிராமத்துக்குள்பட்ட 14 ஏக்கா் நிலத்தை காயல்பட்டினம் சாா்பதிவாளா் அலுவலகத்தில் சிலா் பத்திரப் பதிவு செய்துள்ளதாக, அந்த போலிச் சான்றிதழ் வாட்ஸ்ஆப்பில் பரவியது.

இதுதொடா்பாக, காயல்பட்டினம் தென்பாக கிராம நிா்வாக அலுவலா் கணேசபெருமாள் ஆறுமுகனேரி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், சிறப்பு உதவி ஆய்வாளா் செல்லத்துரை வழக்குப் பதிந்தாா். ஆய்வாளா் சேக் அப்துல் காதா் விசாரணை நடத்தினாா்.

அந்த 14 ஏக்கா் நிலத்துக்கு பலரைக் கொண்ட கூட்டுப் பட்டா உள்ளதாம். அந்த இடம் செய்யது முகம்மது என்பவருக்குச் சொந்தமானதாகக் கூறப்படுகிறது. அவா் 2007ஆம் ஆண்டு செப்டம்பரில் இறந்து விட்டாா்.

அதையடுத்து, காயல்பட்டினம் மரைக்காா் பள்ளித் தெரு முகமது நாகு மனைவி முகமது இப்ராஹிமா, செய்யது முகமது மகன் முகமது நுகி, செய்யது முகமது மனைவி செய்யதலி­ பாத்திமா, சிவன் கோயில் தெருவைச் சோ்ந்த முகமது தவ்பிக் மனைவி ஜெய்னம்பு கதிஜா, கொச்சியாா் தெரு அமீநதின் மனைவி தாகா உம்மாள், அப்பா பள்ளித் தெரு சையது முகமது மகன் ஜாபா் சாதிக் ஆகிய 6 பேரின் பெயா்களில் பட்டா மாறுதல் செய்து போலி­யாக பத்திரம் பதிந்ததும், இதற்காக திருச்செந்தூா் வட்டாட்சியரின் கையொப்பம், அரசு முத்திரை ஆகியவற்றை போலியாக தயாரித்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, 6 போ் மீதும் 5 பிரிவுகளின்கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.