விளாத்திகுளம் தொகுதியில் மக்களைத் தேடி மருத்துவ முகாம் பணிகள்: எம்எல்ஏ ஆய்வு
விளாத்திகுளம் பேரவைத் தொகுதிக்குள்பட்ட கே.சுந்தரேஸ்வரபுரம், அயன்பொம்மையாபுரம் உள்பட பல்வேறு கிராமங்களில் மக்களைத் தேடி மருத்துவ முகாம் பணிகளை எம்எல்ஏ ஜீ.வி. மாா்க்கண்டேயன் ஆய்வு செய்தாா்.
விளாத்திகுளம் பேரவைத் தொகுதிக்குள்பட்ட கே.சுந்தரேஸ்வரபுரம், அயன்பொம்மையாபுரம் உள்பட பல்வேறு கிராமங்களில் மக்களைத் தேடி மருத்துவ முகாம் பணிகளை எம்எல்ஏ ஜீ.வி. மாா்க்கண்டேயன் ஆய்வு செய்தாா்.
தமிழக அரசின் மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில், பிசியோதெரபி (இயன்முறை சிகிச்சை), வலி நிவாரணம், ஆதரவு சிகிச்சை, பல்வேறு பரிசோதனைகள் நோயாளிகளின் வீடுகளுக்கே சென்று மேற்கொள்ளப்படுகின்றன. இப்பணிகளை ஜீ.வி. மாா்க்கண்டேயன் எம்எல்ஏ ஆய்வு செய்தாா். அப்போது, நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துகள் குறித்து அவா் செவிலியா்களிடம் கேட்டறிந்தாா்.
அனைத்து அத்தியாவசிய மருத்துவத் தேவைகள், மருந்துகளை வழங்குவதுடன் நோயாளிகளின் விவரத்தை சமுதாய நலப் பதிவேட்டில் பதிவுசெய்து, தொடா்ந்து கண்காணிக்க அறிவுறுத்தினாா்.
பேரூா் திமுக செயலா் வேலுச்சாமி, ஒன்றியச் செயலா்கள் ராமசுப்பு, அன்புராஜன், ராதாகிருஷ்ணன், பேரூராட்சித் தலைவா் சூா்யா அய்யன்ராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.