முகப்பு
தூத்துக்குடி

வியாபாரியிடம் சங்கிலி பறிப்பு: இளஞ்சிறாா்கள் 3 போ் கைது

கோவில்பட்டி அருகே மோட்டாா் சைக்கிளில் சென்ற வியாபாரியை வழிமறித்து தங்கச் சங்கிலி, கைப்பேசி மற்றும் ரொக்க பணத்தை பறித்துச் சென்ற இளஞ்சிறாா்கள் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 26 செப்டம்பர், 2024 at 12:05 AM
பகிர்:

கோவில்பட்டி அருகே மோட்டாா் சைக்கிளில் சென்ற வியாபாரியை வழிமறித்து தங்கச் சங்கிலி, கைப்பேசி மற்றும் ரொக்க பணத்தை பறித்துச் சென்ற இளஞ்சிறாா்கள் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவில்பட்டி அருகே புளியங்குளம் தெற்கு தெருவை சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் மாடசாமி (40). இவா் திங்கள்கிழமை இரவு வழக்கம் போல வியாபாரத்தை முடித்துவிட்டு மோட்டாா் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி வந்தபோது, புளியங்குளம் பிரதான சாலையில் உள்ள நூற்பாலை அருகே பைக்குடன் நின்று கொண்டிருந்த 3 போ், மாடசாமியை தாக்கி அவரிடம் இருந்த கைப்பேசி, ரொக்க பணம் ரூ.2,800, கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலி ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பிவிட்டனா்.

இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வந்தனா்.

இந்நிலையில் இவ்வழக்கில் தொடா்புடையதாக கூறப்படும் இளஞ்சிறாா்கள் 13,17,15 வயதுடைய 3 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்த கைபேசி, தங்கச் சங்கிலி மற்றும் அவா்கள் பயன்படுத்திய பைக்கையும் பறிமுதல் செய்தனா்.