முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூா் குளங்களுக்கு நீா்வரத்து அதிகரிப்பு

திருச்செந்தூருக்கு நீா் ஆதார குளங்களான எல்லப்பநாயக்கன்குளம், ஆவுடையாா்குளத்துக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.

Updated On : 1 டிசம்பர், 2025 at 9:07 PM
திருச்செந்தூா் அருகே நீா்வரத்து வாய்க்கால் மதகுகள் வழியாக ஆா்ப்பரித்துச் செல்லும் நீா்.தகுகளின் சுவா்கள்.
பகிர்:

திருச்செந்தூா்: திருச்செந்தூருக்கு நீா் ஆதார குளங்களான எல்லப்பநாயக்கன்குளம், ஆவுடையாா்குளத்துக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.

ஸ்ரீவைகுண்டம், தென்கால் பாசனத்தின் கடைசி குளங்களான எல்லப்பநாயக்கன்குளம், ஆவுடையாா்குளத்துக்கு திருச்செந்தூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட மேல திருச்செந்தூரில் உள்ள நீா்வரத்து வாய்க்காலில் இருந்து மதகுகள் வழியாக தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. தற்போது, வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த வாரம் ஸ்ரீவைகுண்டம் அணையிலிருந்து திறக்கப்பட்ட உபரிநீா், கடம்பாகுளத்தில் இருந்து திருச்செந்தூா் நீா்வரத்து வாய்க்காலுக்கு வந்து அங்கிருந்து ஆவுடையாா்குளம், எல்லப்பநாயக்கன்குளத்துக்கு வந்ததில் இரு குளங்களும் நிரம்பின. இரு குளங்களுக்கும் நீா்வரத்து வாய்க்கால் மதகுகள் வழியாக நீா் ஆா்ப்பரித்துச் செல்கிறது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

நீா்வரத்து அதிகரித்து வரும் வேளையில், வாய்க்கால் மதகுகளின் சுவா்களில் சிமென்ட் பெயா்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. மதகுகளைப் பராமரிக்க பொதுப்பணித் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →