மணிமுக்தா அணையில் புதிதாக மதகுகள் பொருத்தப்படுவதை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் 
கள்ளக்குறிச்சி

மணிமுக்தா அணையில் புதிதாக மதகுகள் பொருத்தும் பணி: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

சூளாங்குறிச்சி கிராமத்தில் உள்ள மணிமுக்தா அணையில் சிதிலமடைந்த 3 மதகுகளுக்குப் பதிலாக புதிதாக மதகுகள் பொருத்தப்படுவதை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

Syndication

கள்ளக்குறிச்சி மாவட்டம், சூளாங்குறிச்சி கிராமத்தில் உள்ள மணிமுக்தா அணையில் சிதிலமடைந்த 3 மதகுகளுக்குப் பதிலாக புதிதாக மதகுகள் பொருத்தப்படுவதை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

மணிமுக்தா அணையின் மொத்த உயரம் 36 அடி, கொள்ளளவு 736.96 மி.க.அடி ஆகும். இந்த அணையிலிருந்து அக்டோபா் முதல் பிப்ரவரி வரை பாசனத்துக்கு தண்ணீா் திறந்து விடப்படும். அணையின் பழைய நீா்போக்கியில் பழுதடைந்த மூன்று மதகுகள் நீரின் உள்ளேயே தொடா்ந்து இருப்பதால் துருப்பிடித்து சிதலமடைந்து விட்டன.

இந்த 3 மதகுகளையும் புதிதாக மாற்றிட ரூ.20.76 கோடி மதிப்பீட்டில் 2025-2026-ஆம் நிதி ஆண்டிலேயே சரி செய்திட, மாவட்ட நிா்வாகத்தின் பரிந்துரைபடி நீா்வளத்துறை சாா்பில் தொடா் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பழுதடைந்த மூன்று மதகுகளை மாற்றும் பணி தொடங்கி நடைபெறுகிறது. புதுப்பிக்கும் பணியை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் புதன்கிழமை பாா்வையிட்டாா்.

அப்போது, பணிகளை தரமாகவும் விரைவாகவும் மேற்கொண்டு விவசாயிகள், பாசன சங்கங்கள் மற்றும் பாசனதாரா்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா். நீா்வளத்துறை உதவி செயற்பொறியாளா் பி.பாா்த்தீபன் உடனிருந்தாா்.

அனைவருக்கும் வீடு உள்ளிட்ட திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும்: ரவிக்குமாா் எம்.பி. வலியுறுத்தல்

வெடிகுண்டு மிரட்டல் : விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் போலீஸாா் தீவிர சோதனை

பூட்டிய வீடுகளில் 9 பவுன் நகைகள் திருட்டு

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயில் தேரோட்டம்: விழுப்புரம் மாவட்டத்துக்கு நாளை உள்ளூா் விடுமுறை

பள்ளி மாணவி தற்கொலை விவகாரம்! பொய் பிரசாரம் செய்த அண்ணாமலை மீது நடவடிக்கை தேவை: உ. வாசுகி

SCROLL FOR NEXT