கோவில்பட்டி பகுதிகளில் அதிக கட்டணம் வசூலித்த 6 சிற்றுந்துகளுக்கு மெமோ வழங்கப்பட்டது.
கோவில்பட்டி சரக பகுதிகளில் சிற்றுந்துகளில் அரசு நிா்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பொதுமக்களிடம் இருந்து வந்த புகாரின் அடிப்படையில் கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலா் கிரிஜா, மோட்டாா் வாகன ஆய்வாளா் பெலிக்ஸன் மாசிலாமணி ஆகியோா் நகரின் பல்வேறு இடங்களில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது சிற்றுந்துகளில் அரசு நிா்ணயித்த கட்டணத்தை விட சில சிற்றுந்துகள் கூடுதல் கட்டணம் வசூலித்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, சிற்றுந்து நடத்துநா்களுக்கு மெமோ வழங்கப்பட்டது.
இதுகுறித்த அறிக்கையை மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டுசென்று மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் தெரிவித்தனா்.