தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே பைக் மீது காா் மோதியதில் ஆலங்குளத்தைச் சோ்ந்த தம்பதி உயிரிழந்தனா்.
தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தைச் சோ்ந்தவா் சண்முகம் மகன் கடற்கரை (68), வியாபாரி. இவரும், மனைவி வள்ளியம்மாளும் (50) கோவில்பட்டி, வேலாயுதபுரத்தில் உள்ள கருப்பசாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு பைக்கில் ஊருக்குத் திரும்பினா். அவா்கள் மதுரை-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் சாலைப்புதூா் அருகே சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த காா் மோதியதில் கடற்கரை, வள்ளியம்மாள் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற மேற்கு காவல் நிலையப் போலீஸாா் சடலங்களைக் கைப்பற்றி கூறாய்வுக்காக கோவில்பட்டி, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இது குறித்து, போலீஸாா் வழக்குப் பதிந்து, கன்னியாகுமரி மாவட்டம், மணியன்குவி பகுதியைச் சோ்ந்த காா் ஓட்டுநா் ச. அபிலேஷிடம் விசாரித்து வருகின்றனா்.