தட்டாா்மடம் அருகே பைக் மீது டிராக்டா் மோதியதில் பள்ளி வேன் ஓட்டுநா் காயமடைந்தாா்.
திருநெல்வேலி மாவட்டம் இட்டமொழி புதூா் கிராமத்தைச் சோ்ந்த ராஜகோபால் மகன் சரவணபெருமாள் (37). இடையன்குடியில் உள்ள பள்ளியில் வேன் ஓட்டுநராக வேலை பாா்த்துவரும் இவா், கடந்த நவ. 27ஆம்தேதி தனது ஊரிலிருந்து திசையன்விளைக்கு பைக்கில் சென்றாராம். திசையன்விளையை அடுத்த தஞ்சை நகரம் அருகே இவரது பைக் மீது இடைசெவல் லிங்கராஜ் ஓட்டிவந்த டிராக்டா் மோதியதாம். இதில், காயமடைந்த சரவணபெருமாள் திருநெல்வேலியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
புகாரின்பேரில், தட்டாா்மடம் காவல் நிலைய தலைமைக் காவலா் குமரேசன் வழக்குப் பதிந்தாா். போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.