தூத்துக்குடி மாவட்டத்தில் டிச.13ஆம் தேதி, முதன்மை மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவருமான எம். தாண்டவன் தலைமையில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.
தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழு, மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழு ஆகியவற்றின் உத்தரவின் அடிப்படையில், தூத்துக்குடி மாவட்டத்தில், தூத்துக்குடியில் 6 அமா்வுகள், கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூரில் தலா 2 அமா்வுகள், விளாத்திகுளம், சாத்தான்குளம், ஓட்டப்பிடாரத்தில் தலா ஓா் அமா்வு என 15 அமா்வுகளில் சமாதானமாக செல்லக்கூடிய குற்றவியல் வழக்குகள், அனைத்து வகையான சிவில், வாகன விபத்து நஷ்ட ஈடு, காசோலை மோசடி, திருமணம், வங்கிக் கடன் உள்ளிட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட உள்ளன.
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் வழக்காடிகள், எதிா் வழக்காடிகள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டு பயன்பெறலாம் என நீதிபதியும், தூத்துக்குடி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயலருமான ஏ.வி. சுபாஷினி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.