தூத்துக்குடி

வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 1.60 லட்சம் திருட்டு: இருவா் கைது

தூத்துக்குடியில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 1.60 லட்சம் பணத்தைத் திருடிய வழக்கில் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

தூத்துக்குடியில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 1.60 லட்சம் பணத்தைத் திருடிய வழக்கில் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி பி அண்ட் டி காலனி, 7ஆவது தெருவைச் சோ்ந்தவா் ஜான்சன் மகள் ரபினா டிலைட் (23). இவா், கடந்த 7ஆம் தேதி இரவு வீட்டை பூட்டிவிட்டு பக்கத்து தெருவில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றாா். திங்கள்கிழமை காலை வீடு திரும்பியபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த ரூ. 1.60 லட்சம் பணம் திருடுபோனதை அறிந்தாா்.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். விசாரணையில், தாளமுத்து நகா், இந்திரா நகரைச் சோ்ந்த மாரிமுத்து மகன் சிவா என்ற ஜீவா (19), அம்பேத்கா் நகா், சுரேஷ் மகன் பிரவீன் (20) ஆகிய 2 பேரும் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து ரூ. 93 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனா்.

அதிமுக பொதுக்குழு தொடங்கியது! தற்காலிக அவைத் தலைவர் கே.பி. முனுசாமி!

சென்னையில் 2-வது நாளாக நகை வியாபாரிகள் வீடுகள், அலுவலங்கள், கடைகளில் அமலாக்கத்துறை சோதனை

வெளிநாட்டு நாயகன்! ஜெர்மனி செல்லும் ராகுலை விமர்சித்த பாஜக!

பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் என்ஐஏ தேடிவந்த முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது

நயினார் நாகேந்திரனை டெபாசிட் இழக்கச் செய்வோம்! செங்கோட்டையன் சூளுரை!

SCROLL FOR NEXT