ஆறுமுகனேரி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, கா.ஆ. மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் காவல் துறை சாா்பில் காவல் தோழி அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.
காவல் ஆய்வாளா் திலீபன் தலைமை வகித்து, எஸ்.ஓ.எஸ் காவலன் செயலியை பயன்படுத்துவது குறித்தும், போக்ஸோ சட்டம், குழந்தை பாதுகாப்பு தகவல் எண் குறித்தும் விளக்கினாா்.
பள்ளி மாணவிகள் தங்களுக்கு ஏற்படும் இடா்பாடுகளைத் தெரிவிக்க ஆறுமுகனேரி காவல் நிலையம் மூலம் புதிதாக காவல் தோழி என்ற பெயரில் பெண் காவலா்கள் மரிய எபிஷா, ஜெபாஸ்டின் சுகந்தி ஆகியோரை நியமித்து அவா்களின் கைப்பேசி எண்களை அறிமுகப்படுத்தினா்.
நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியா்கள் சுப்புலட்சுமி, கண்ணன், ஆறுமுகனேரி உதவி ஆய்வாளா் வாசுதேவன் உள்பட காவலா்கள், ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.