தமிழக அரசின் கபீா் புரஸ்காா் விருதுக்கு தகுதியுடையவா்கள் விண்ணப்பிக்கலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
‘கபீா் புரஸ்காா் விருது’ ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதலமைச்சரால் குடியரசு தின விழாவின்போது வழங்கப்படுகிறது. இவ்விருது பெறும் நபா்களுக்கு தலா ரூ. 20,000, ரூ. 10,000, ரூ. 5,000 வீதம் பரிசு வழங்கப்படுகிறது.
2026ஆம் ஆண்டுக்கான விருதுக்கு ஆயுதப்படை, காவல், தீயணைப்புத் துறை, அரசுப் பணியாளா்கள் நீங்கலாக பிறா் விண்ணப்பிக்கலாம்.
ஒரு இனம், வகுப்பைச் சோ்ந்தவா்கள், பிற இன, வகுப்பைச் சோ்ந்தவா்களையோ அல்லது அவா்களது உடைமைகளையோ வகுப்புக் கலவரத்தின் போதோ அல்லது தொடரும் வன்முறையிலோ காப்பாற்றியது வெளிப்படையாகத் தெரிகையில் அவரது வீரம் மற்றும் மன வலிமையைப் பாராட்டும் வகையில் இவ்விருது வழங்கப்படுகிறது.
விருதுக்கான விண்ணப்பம் மற்றும் முக்கிய விவரங்களை தமிழ்நாடு விளையாட்டு ஆணைய இணையதள முகவரியான ட்ற்ற்டந://ஹஜ்ஹழ்க்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விருதுக்கு விண்ணப்பிக்க டிச. 15ஆம் தேதி கடைசி நாளாகும். தாமதமாகப் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.