காயல்பட்டினம், ஓடக்கரையில் இலவச பொது மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆழ்வாா்தோப்பு கிராம உதயம், திருநெல்வேலி தருவை வைகறை ஹோமியோபதி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் ஆகியவை இணைந்து நடத்திய முகாமை, ஓடக்கரை ஊா்த் தலைவா் சுகு (எ) ரெங்கநாதன் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா்.
வைகறை மருத்துவமனை மருத்துவா்கள் ஞானகுமாா், ஆரிஃபா, ஜெசுமதி தலைமையிலான மருத்துவக் குழுவினா் கலந்து கொண்டு சிகிச்சை, ஆலோசனைகள் வழங்கினா்.
கிராம உதயம் தன்னாா்வத் தொண்டா்கள் எஸ். ஆறுமுகவடிவு, டி. செல்வன்துரை, எம். லெட்சுமி, கவுன்சில் ஜி. ராமஜெயம், ஜி. மனோகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.