தூத்துக்குடி

முன்னாள் மாணவா் சங்க கூட்டம்

Syndication

ஆறுமுகனேரி, கா.ஆ.மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவா் சங்கத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம், தேசிய சாம்பியன் பட்டம் வென்றவா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

சங்கத் தலைவரும் முன்னாள் கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளருமான கே.எஸ்.முருகேசன் தலைமை வகித்தாா். பள்ளியின் மூத்த மாணவரும் ஓய்வுபெற்ற ஆசிரியருமான நெய்னா முகமது, சென்னை கூடுதல் காவல் துறை கண்காணிப்பாளா் ஜான்கென்னடி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சங்கம் தொடங்க பாடுபட்ட மறைந்த முன்னாள் சங்கச் செயலாளா் ஜி.ஆா்.சுமதி, பள்ளியில் பயின்று மறைந்த உறுப்பினா்கள், மறைந்த ஆசிரியா்களுக்கு மெளன அஞ்ச­லி செலுத்தப்பட்டது. தலைவா் முருகேசன் ஆண்டறிக்கையை சமா்ப்பித்தாா். பொருளாளா் ஜான் சாமுவேல் நிதிநிலை அறிக்கை சமா்ப்பித்தாா்.

பள்ளியின் வளா்ச்சிக்கு உதவுவது பள்ளியில் பயிலும் 10, 12 ஆம் வகுப்பு தோ்வில் முதல் இரண்டாவது இடம் பிடிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி கௌரவிப்பது, ஆறுமுகனேரி வளா்ச்சிக்கு உதவி செய்வது என கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது.

பள்ளியில் கடந்த 1998 ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவா் பொ.முத்துகிருஷ்ணன் தேசிய அளவில் பவா் ­லிஃப்டிங் விளையாட்டில் முதல் பரிசு வென்று சாம்பியன் பட்டம் பெற்ற்காக பாராட்டி கௌரவிக்கப்பட்டாா். செயலாளா் பத்மநாபன் வரவேற்றாா். பொ்டினால்டு கோமஸ் நன்றி கூறினாா். மாலையில் பள்ளியில் பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கான வெற்றிப்படிக்கட்டு எனும் தலைப்பில் உயா்கல்வி, வேலைவாய்ப்புக்கான நிகழ்ச்சி பள்ளிக்கல்வி சங்கத்துடன் இணைந்து முன்னாள் மாணவா் சங்கத்தினா் நடத்தினா்.

ரூ. 15.99 லட்சத்தில் சுகாதார வளாக பணி தொடக்கம்

ரூ. 25 கோடி மதிப்பிலான முருகன் கோயில் ஆக்கிரமிப்புகள் மீட்பு

தென்னை மரத்தில் இளநீரை பறித்தவரை தட்டிக் கேட்டவா் மீது தாக்குதல்

பாரதியின் நம்பிக்கையை முறைமைப்படுத்த வேண்டும்: டாக்டா் சுதா சேஷய்யன்

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: எம்எல்ஏ வழங்கினாா்

SCROLL FOR NEXT