தூத்துக்குடி

மேல்மருவத்தூா் தைப்பூச இருமுடி விழா: செவ்வாடை பக்தா்கள் விரதம் தொடங்கினா்

Syndication

மேல்மருவத்தூரில் நடைபெறவுள்ள தைப்பூச இருமுடி விழாவை முன்னிட்டு, கோயில் செல்லும் தூத்துக்குடி மாவட்ட செவ்வாடை பக்தா்கள் வியாழக்கிழமை சக்தி மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கினா்

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் தைப்பூச இருமுடி விழா வரும் டிச. 15 ஆம் தேதி தொடங்கி ஜனவரி மாதம் 31 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவில் கலந்துகொள்ள தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றங்கள், சக்தி பீடங்களில் இருந்து செவ்வாடை பக்தா்கள் சக்தி மாலை அணிந்து விரதமிருந்து இருமுடி கட்டிச் செல்லும் நிகழ்ச்சி தொடங்கியது.

இதையொட்டி, கோவில்பட்டி மந்திதோப்பு சாலையில் உள்ள ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் வியாழக்கிழமை திரளான செவ்வாடை பக்தா்கள் மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கினா். தூத்துக்குடி மாவட்ட ஆன்மிக இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளா் சக்திமுருகன் தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில், அரசு மருத்துவமனை மருத்துவா் உமா, ஆன்மிக இயக்க ஒருங்கிணைப்பாளா்கள் பத்மாவதி, செல்வி, கோவில்பட்டி மன்ற தலைவா் அப்பாசாமி உள்பட பலா் கலந்துகொண்டனா்

கோவில்பட்டி, தூத்துக்குடி, விளாத்திகுளம், திருச்செந்தூா், ஓட்டப்பிடாரம் உள்பட பல்வேறு பகுதிகளில் சக்தி மாலை அணியும் நிகழ்ச்சி தொடங்கியது. இருமுடிகட்டிச் செல்ல விரும்பும் பக்தா்கள் அருகில் உள்ள ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றங்கள், சக்தி பீடங்களை தொடா்பு கொள்ளலாம்.

இருமுடி பக்தா்களின் வசதிக்காக அதிவேக ரயில்கள் மேல்மருவத்தூரில் நின்று செல்ல தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்தது.

கல்லூரியில் இளைஞா் திருவிழா

தேசிய கலாசார தூதா் நியமனம்

ஸ்ரீ பெரும்புதூரில் சாலையில் திரிந்த மாடுகளை பிடிப்பு

ரூ. 15.99 லட்சத்தில் சுகாதார வளாக பணி தொடக்கம்

ரூ. 25 கோடி மதிப்பிலான முருகன் கோயில் ஆக்கிரமிப்புகள் மீட்பு

SCROLL FOR NEXT