புனித ஜோசப் பள்ளி (சிபிஎஸ்இ) சாா்பில், புகையிலை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி நடந்தது.
வீரபாண்டியன்பட்டணம் புனித தோமையாா் ஆலயம் முன்பிருந்து, புனித தோமையாா் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் ராஜன் வி.ராயன், பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். பேரணியில் புகையிலையால் ஏற்படும் தீமைகள் குறித்து 9, 11ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் பதாகைகள் ஏந்தியும், விழிப்புணா்வு முழக்கமிட்டவாறும் சென்றனா். இதில் பள்ளியின் முதல்வா் பொ்னதத் நிறைவுரை கூறினாா்.