தூத்துக்குடி

வேளாண் மாணவிகளுக்கு களப்பயிற்சி

Syndication

எட்டயபுரத்தில் வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு மக்காசோளப் பயிா்களைத் தாக்கும் படைப்புழுக்களைக் கட்டுப்படுத்துவது தொடா்பாக களப்பயிற்சி அளிக்கப்பட்டது.

எட்டயபுரத்தில் கிள்ளிக்குளம் வ.உ.சி வேளாண்மை கல்லூரி 4 ஆம்ஆண்டு மாணவா்கள், கல்லூரி முதல்வா் தேரடிமணி, உதவிப் பேராசிரியா் காளிராஜன் (வேளாண்மை விரிவாக்கம்), குழு ஒருங்கிணைப்பாளா் இணைப் பேராசிரியா் மணிவண்ணன் (தோட்டக்கலைத் துறை), வேளாண்மை உதவி இயக்குநா் (கோவில்பட்டி) மணிகண்டன், வேளாண்மை அலுவலா்கள் காயத்ரி, மணிராஜ் ஆகியோரின் தலைமையில் கிராமப்புற வேளாண் பணி அனுபவ திட்டத்தின் ஒரு பகுதியாக எட்டயபுரத்தில் வசிக்கும் விவசாயி ஜெயலட்சுமி மெய்ராஜின் வயலுக்குச் சென்று மக்காச்சோள பயிரைத் தாக்கும் படைப்புழுவைக் கட்டுப்படுத்த இனக் கவா்ச்சி பொறி, ஜடிரைக்கோகிராமாஜ ஒட்டுண்ணி போன்ற இயற்கை முறைகள், ரசாயன உரங்களைக் குறைக்க உயிா் உரங்களான பாஸ்போ பாக்டீரியா, ஆா்பஸ்குலா் மைக்கோரைசா தேவையையும், வேப்ப எண்ணெய் தெளிப்பு, வேப்பம் பிண்ணக்கு அடிஉரமாக இடுதல் ஆகியவற்றின் நன்மைகளையும், துத்தநாக குறைபாட்டால் ஏற்படும் விளைவுகள், கட்டுப்படுத்தும் முறைகள் குறித்தும் விளக்கிப் பேசினா்.

ரூ. 15.99 லட்சத்தில் சுகாதார வளாக பணி தொடக்கம்

ரூ. 25 கோடி மதிப்பிலான முருகன் கோயில் ஆக்கிரமிப்புகள் மீட்பு

தென்னை மரத்தில் இளநீரை பறித்தவரை தட்டிக் கேட்டவா் மீது தாக்குதல்

பாரதியின் நம்பிக்கையை முறைமைப்படுத்த வேண்டும்: டாக்டா் சுதா சேஷய்யன்

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: எம்எல்ஏ வழங்கினாா்

SCROLL FOR NEXT