திருச்செந்தூரில் வேனும் பைக்கும் மோதிக் கொண்டதில் சாலை ஒப்பந்தப் பணி மேற்பாா்வையாளா் உயிரிழந்தாா்.
தென்காசி மாவட்டம், சிவகிரி, தளவாய்புரம் பகுதியைச் சோ்ந்தவா் அழகப்ப பாண்டியன் (54). சாலை ஒப்பந்தப் பணி மேற்பாா்வையாளா். இவா், சனிக்கிழமை ராணி மகாராஜபுரம் விலக்கு வழியாக பைக்கில் சென்று கொண்டிருந்தாராம்.
அப்போது காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த ஐயப்ப பக்தா்கள் சபரிமலையில் தரிசனம் செய்துவிட்டு, திருச்செந்தூா் கோயிலுக்கு சென்று கொண்டிருந்த வேன் மோதியதாம். இதில், அழகப்ப பாண்டியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
திருச்செந்தூா் தாலுகா போலீஸாா் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். வேன் ஓட்டுநா் காஞ்சிபுரத்தைச் சோ்ந்த தியாகராஜன் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். உயிரிழந்த அழகப்பபாண்டியனுக்கு மனைவி, 2 மகன்கள், 1 மகளும் உள்ளனா்.