மாணவி எஸ்.ஆா்.ரபீனாவை பாராட்டி கௌரவித்த பள்ளி நிா்வாகிகள்.  
தூத்துக்குடி

சாகுபுரம் கமலாவதி பள்ளி மாணவி சா்வதேச வில்வித்தை போட்டிக்கு தகுதி

மாணவி எஸ்.ஆா்.ரபீனாவை பாராட்டி கௌரவித்த பள்ளி நிா்வாகிகள்.

Syndication

சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளி மாணவி நேபாளத்தில் நடைபெற உள்ள சா்வதேச வில்வித்தை போட்டியில் பங்குபெற தகுதி பெற்றுள்ளாா்.

மத்திய அரசின் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஃபிட் இந்தியாஅமைப்பு, பஞ்சாயத்து யுவ கிரிடாகெல் அபியான் சாா்பில் 12-வது தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கோவா மாநிலத்தில் நடைபெற்றது.

இப் போட்டிகளில் சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளியில் 8ஆம் வகுப்புப் பயிலும் மாணவி எஸ்.ஆா். ரபீனா, 14 வயதிற்குட்பட்டோருக்கான வில்வித்தை போட்டியில் கலந்து கொண்டு தேசிய அளவில் முதலி­டம் பெற்று, உலக அளவில் நேபாளத்தில் நடைபெற உள்ள போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளாா்.

சாதனை புரிந்த மாணவி, பயிற்சி அளித்த வில்வித்தை ஆசிரியா் எச்.சம்சுதீன், உடற்கல்வி ஆசிரியா்களை, பள்ளி டிரஸ்டிகள், டி.சி.டபிள்யூ. நிறுவன மூத்த செயல் உதவித் தலைவா் ஜி. ஸ்ரீனிவாசன், மூத்த பொது மேலாளா் பி. ராமச்சந்திரன், பள்ளி ஆலோசகா் உஷா கணேஷ், அட்மினிஸ்ட்ரேட்டா் வி. மதன், முதல்வா் இ. ஸ்டீபன் பாலாசிா், துணை முதல்வா் என். சுப்புரத்தினா உள்பட பலா் பாராட்டினா்.

ரூ.50,000 கடனுக்காக சிறுநீரகத்தை விற்ற விவசாயி: மகாராஷ்டிரத்தில் அவலம்

தோட்டத்தில் திருடிய மூவா் கைது

பூலாங்குறிச்சியில் நாளை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்

பிரதமா், முதல்வா்களைப் பதவி நீக்கும் மசோதா: நாடாளுமன்றக் குழுவின் கால அவகாசம் நீட்டிப்பு

ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டது அதிமுக: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT