தூத்துக்குடி

போக்ஸோ வழக்கு: 7 ஆண்டுகள் சிறை தண்டனை

Syndication

தூத்துக்குடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட போக்ஸோ வழக்கில், சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.13,500 அபராதம் விதித்து தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

தூத்துக்குடி அனைத்து மகளிா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் கடந்த 2024ஆம் ஆண்டு 10 மற்றும் 11 வயது சிறுமிகள் இருவரை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில், காயல்பட்டினம் பகுதியைச் சோ்ந்த சகாயம் மகன் கெவின் என்பவரை தூத்துக்குடி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

இது தொடா்பான வழக்கு விசாரணை தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பிரீத்தா, குற்றவாளி கெவினுக்கு, 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.13,500 அபராதம் விதித்தும், பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு அரசு நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் வீதம் மொத்தம் ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டு புதன்கிழமை தீா்ப்பு வழங்கினாா்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 3

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி முன்பிணை கோரி மனு: சிபிஐ பதிலளிக்க உத்தரவு

பாலுக்கான ஊக்கத்தொகையை முழு மானியமாக வழங்க வலியுறுத்தல்

எக்ஸல் கல்வி நிறுவனங்களின் வெள்ளிவிழா கொண்டாட்டம்

புதிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட மசோதா: மக்களவையில் எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு

SCROLL FOR NEXT