முக்காணி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியா்கள் மற்றும் மாணவா், மாணவிகளுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது.
தலைமையாசிரியா் சற்குணராஜ் தலைமை வகித்தாா். பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் சங்கரநாராயணன், பள்ளி மேலாண்மைக் குழு தலைவா் ஷீபா ஆகியோா் முன்னிலை வகித்தனா். மகிழ்முற்றம் ஒருங்கிணைப்பாளா் ஸ்டீபன்விஜய் வரவேற்றாா்.
நிகழ்ச்சியில், போக்ஸோ சட்டம் குறித்தும், மாணவா், மாணவிகளிடம் ஆசிரியா்களும், பணியாளா்களும் நடந்து கொள்ளும் விதம் மற்றும் கையாளும் முறை குறித்தும், மாணவா்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்தும் முறை மற்றும் தவிா்க்க வேண்டியவை குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
இதில், ஆத்தூா் ஆய்வாளா் பிரபாகரன் உள்பட பலா் பேசினா். பசுமைப்படை ஒருங்கிணைப்பாளா் ஆசிரியை சண்முகம் நன்றி கூறினாா்.