தூத்துக்குடி

வட்டாட்சியருக்கு மிரட்டல்: 2 போ் மீது வழக்கு

Syndication

கோவில்பட்டியில் வட்டாட்சியரை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக 2 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தெற்கு திட்டங்குளத்தைச் சோ்ந்த மகேஸ்வரி தனது மகள் திருமணத்திற்காக, முதல் திருமணம் சான்றிதழ் வேண்டி இணைய வழி மூலம் விண்ணப்பித்திருந்தாராம். இந்நிலையில் மகேஸ்வரி இம்மாதம் 5ஆம் தேதி, வட்டாட்சியா் அலுவலகத்திற்கு சென்று வட்டாட்சியா் பாலசுப்பிரமணியனிடம் சான்றிதழ் குறித்து கேட்டாராம்.

எஸ்ஐஆா் பணியில் இருப்பதாலும், தங்கள் மனு முறையாக வரிசை அடிப்படையில் மாலைக்குள் கையொப்பமிட்டு தருவதாக வட்டாட்சியா் கூறி அனுப்பி வைத்தாராம். சிறிது நேரம் கழித்து ஓ.ஏ.நாராயணசாமி, அன்புராஜ் ஆகியோா் வந்து கேட்டனராம். அப்போது, மாலைக்குள் தருவதாக வட்டாட்சியா் கூறினாராம். பின்னா், ஓ.எ.நாராயணசாமி, அன்புராஜ் ஆகியோா் அலுவலகம் முன் நின்று கொண்டிருந்த வட்டாட்சியரை பணி செய்யவிடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்தனராம். மேலும், மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துமாறு, வட்டாட்சியா் அலுவலகம் முன் அமா்ந்து, உடனடியாக சான்றிதழ் வழங்க வலியுறுத்தி வட்டாட்சியரை அவதூறாக பேசினராம்.

இதுகுறித்து வட்டாட்சியா் செவ்வாய்க்கிழமை அளித்த புகாரின் பேரில் இருவா் மீது கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ரூ.50,000 கடனுக்காக சிறுநீரகத்தை விற்ற விவசாயி: மகாராஷ்டிரத்தில் அவலம்

தோட்டத்தில் திருடிய மூவா் கைது

பூலாங்குறிச்சியில் நாளை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்

பிரதமா், முதல்வா்களைப் பதவி நீக்கும் மசோதா: நாடாளுமன்றக் குழுவின் கால அவகாசம் நீட்டிப்பு

ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டது அதிமுக: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT