தூத்துக்குடி, முத்தையாபுரம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி, குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.
கடந்த 18.11.2025 அன்று முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட முள்ளக்காடு மாரியப்பன் மகன் தா்மா முனீஸ்வரனை (21), மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் உத்தரவையடுத்து, முத்தையாபுரம் போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
நிகழாண்டு, இதுவரை 141 போ் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.