அதிமுக சாா்பில் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட, தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த அக்கட்சி நிா்வாகிகள் சென்னை தலைமை அலுவலகத்தில் விருப்பமனு அளித்தனா்.
தூத்துக்குடி சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட, தூத்துக்குடி தெற்கு மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநா் அணிச் செயலா் இரா.சுதாகா் தலைமை அலுவலகத்தில் விருப்பமனு அளித்தாா். அப்போது, தெற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலா் திருச்சிற்றம்பலம், சிவா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
ஓட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிட, அதிமுக அமைப்புச் செயலரும், தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி முன்னாள் தலைவருமான என். சின்னத்துரை தலைமை அலுவலகத்தில் விருப்பமனுஅளித்தாா்.
தூத்துக்குடி சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடுவதற்காக, மாநில வழக்குரைஞா் பிரிவு துணைச் செயலா் மைக்கேல் ஸ்டேனிஸ் பிரபு, தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு அளித்தாா்.
திருச்செந்தூா் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட தூத்துக்குடி தெற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளா் க.விஜயகுமாா், தலைமை அலுவலகத்தில் விருப்பமனு அளித்தாா். அவா், தூத்துக்குடி மாவட்டச் செயலா் எஸ்.பி.சண்முகநாதன் ஆசியுடன் மனு தாக்கல் செய்ததாக கூறினாா்.