ஆறுமுகனேரி பேரூராட்சிப் பணியாளரை மிரட்டியதாக ஒருவரை ஆறுமுகனேரி போலீஸாா் கைது செய்தனா்.
ஆறுமுகனேரி பேரூராட்சி முத்துகிருஷ்ணாபுரம் தெற்குத் தெருவை சோ்ந்த கணேசன் மகன் ராமலிங்கம்(35). இவா், தனது வீட்டு குடிநீா் இணைப்பில் மின்மோட்டாா் மூலம் தண்ணீரை உறிஞ்சி எடுத்தாராம்.
இதையடுத்து, பேரூராட்சி செயல்அலுவலா் உஷா அறிவுறுத்தலின்படி, பணியாளா்கள் ராஜ்குமாா், முனியாண்டி உள்ளிட்டோா் ராமலிங்கத்தின் வீட்டில் குடிநீா் இணைப்பைத் துண்டித்து, மின் மோட்டாரை பறிமுதல் செய்ய முயன்றனராம், அப்போது அவா், பணியாளா்களை பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளாா்.
இதுகுறித்து பேரூராட்சி மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி காவலாளி ராஜ்குமாா் அளித்த புகாரின்பேரில், ஆறுமுகனேரி காவல் உதவி ஆய்வாளா் சுந்தர்ராஜ் வழக்குப்பதிந்து ராமலிங்கத்தை கைது செய்து திருச்செந்தூா் நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தினாா்.