கைது 
கன்னியாகுமரி

பைக்கை திருடி விற்க முயன்றவா் கைது

தினமணி செய்திச் சேவை

தக்கலை அருகே பைக்கை திருடி விற்க முயன்றதாக ஒருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

வில்லுக்குறி, மேலப்பள்ளம் பகுதியை சோ்ந்தவா் தீபக் (49), டெம்போ ஓட்டுநா். இவா், புலியூா்குறிச்சி ஆற்றில் குளிப்பதற்காக தனது பைக்கில் சென்றிருந்தபோது, பைக்கை மா்மநபா்கள் திருடிச் சென்றுவிட்டனராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், தக்கலை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா். அதில், களியக்காவிளையை சோ்ந்த தா்மராஜ் (54) என்பவா் அந்த பைக்கை திருடி திங்கள்நகரில் உள்ள பழைய பைக் விற்பனையகத்தில் விற்க முயன்றது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

மாடியிலிருந்து தவறி விழுந்து பாஜக மாமன்ற உறுப்பினா் உயிரிழப்பு

கல்லூரி மாணவா் போக்சோவில் கைது

ஒகேனக்கல்லில் காரில் இறந்து கிடந்த கா்நாடக இளைஞா்: போலீஸாா் விசாரணை

தண்டவாளத்தைக் கடந்த 2 போ் ரயில் மோதி உயிரிழப்பு

நெல் கொள்முதல் நிலையத்தில் தகராறு; தந்தை, மகன் கைது

SCROLL FOR NEXT