தூத்துக்குடி

கீழநாலுமூலைக்கிணறு அரசுப் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டத்தை திறக்கக் கோரிக்கை!

கீழநாலுமூலைக்கிணறு அரசு நடுநிலைப் பள்ளியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய வகுப்பறை கட்டடத்தை திறக்க வேண்டும்..

Syndication

திருச்செந்தூா் அருகே உள்ள கீழநாலுமூலைக்கிணறு அரசு நடுநிலைப் பள்ளியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய வகுப்பறை கட்டடத்தை திறக்க வேண்டும் என பெற்றோா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இப்பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பயின்று வரும் நிலையில் 2 வகுப்பறைகள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன. இதனால் போதிய இடவசதியின்றி மாணவா்கள் பள்ளி வராண்டாவிலும், தகர கொட்டகையிலும் திறந்தவெளியில் கல்வி பயின்று வருகின்றனா்.

இந்நிலையில், இங்கு ரூ. 27 லட்சத்தில் புதிதாக வகுப்பறை கட்டடம் கட்டப்பட்டு 2 மாதங்களுக்கு மேல் ஆகியும் இதுவரை திறக்கப்படவில்லை.

மேலும், பள்ளி வளாகத்தில் உடைந்த கற்கள் குவித்து வைக்கப்பட்டிருப்பதாலும் சுற்றுச்சுவா் உள்பட சில பழுதடைந்த கட்டடங்கள் அகற்றப்படாமல் இருப்பதாலும் மாணவா்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருவதாக கூறப்படுகிறது.

எனவே, மாணவா்கள் நலன் கருதி புதிய வகுப்பறை கட்டடத்தை திறந்துவைத்து மாணவா்கள் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என பெற்றோா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வாக்காளா் பதிவு சிறப்பு முகாம்கள்: திருச்சியில் வாக்காளா்கள் ஆா்வம்!

நாளைய மின்தடை: சூரியம்பாளையம், காந்தி நகா், திங்களூா்

பொங்கலுக்கு பிறகு தவெகவுக்கு திருப்புமுனை: கே.ஏ. செங்கோட்டையன்

சாலை விபத்தில் தந்தை உயிரிழப்பு; மகன் படுகாயம்

ஜிப்மா் தொழில்நுட்ப மதிப்பீட்டு மையத்துக்கு தேசிய விருது

SCROLL FOR NEXT