கோவில்பட்டி அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக இளைஞரை, போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
கயத்தாறு அருகே ராஜா புதுக்குடி, வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் காமாட்சி மகன் அரவிந்த் (21). இவா் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாராம்.
இது குறித்து சிறுமி அளித்த புகாரின்பேரில், கோவில்பட்டி அனைத்து மகளிா் காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து அரவிந்தை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.