தூத்துக்குடி

சிறுமிக்கு மஞ்சள் காமாலைக்கான சிகிச்சை: தூத்துக்குடி அரசு மருத்துவா்கள் சாதனை

தென் தமிழகத்திலேயே முதல்முறையாக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 10 வயது சிறுமிக்கு கணைய வீக்கம், பித்தப் பாதையில் அடைப்பு கண்டறியப்பட்டு, மஞ்சள் காமாலை நோய்க்கான சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

தென் தமிழகத்திலேயே முதல்முறையாக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 10 வயது சிறுமிக்கு கணைய வீக்கம், பித்தப் பாதையில் அடைப்பு கண்டறியப்பட்டு, மஞ்சள் காமாலை நோய்க்கான சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 10 வயது சிறுமி மஞ்சள் காமாலை நோயோடு மிகவும் மோசமான நிலையில் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டாா். அவரை பரிசோதனை செய்ததில், அவருக்கு கணையவீக்கம் மற்றும் பித்தப்பாதையில் அடைப்பு போன்ற நோய் கண்டறியப்பட்டது. குழந்தைகளுக்கு பித்த பாதையில் கல், கணைய பிரச்னை ஏற்படுவது அரிது. அதை சரிசெய்ய இதுவரை சென்னை அரசு மருத்துவமனைக்கே குழந்தைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், முதல்வா் சிவகுமாா், மருத்துவக் கண்காணிப்பாளா் பத்மநாபன், உறைவிட மருத்துவா் சைலஸ் செயமணி ஆகியோா் வழிகாட்டுதலின்படி குடல் மற்றும் இரைப்பை மருத்துவப் பிரிவில் உள்ள மருத்துவா்கள் செல்வசேகரன், சாய்ராமன், விக்னேஷ்வரன் ஆகியோா் பித்தபாதையில் அடைத்திருந்த கல், கசடு அடைப்பை இஆா்சிபி என்ற எண்டோஸ்கோப்பி சிகிச்சை மூலம் நீக்கி, பித்தபாதையில் வடிகுழாயை வெற்றிகரமாக குழந்தைகள் மருத்துவ பிரிவு துறைத் தலைவா் அருணாசலம், மயக்கவியல் மருத்துவா் பலராமன், விஜயராகவன் உதவியுடன் வைத்தனா். தற்போது அந்தச் சிறுமிக்கு காமாலை குறைந்து ஆரோக்கியமாக உள்ளது. இந்த முறை சிகிச்சை குழந்தைகளுக்கு செய்வதில் தென்தமிழகத்திலேயே தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில்தான் முதல்முறையாக மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிடத்தக்கது.

காவல், காதல், ஒரு குற்றவாளி... விக்ரம் பிரபுவின் சிறை - திரை விமர்சனம்

ஏழுமலையான் தரிசனத்துக்கு 16 மணிநேரம் காத்திருப்பு

வன்னியா் சங்க பேருந்து நிழற்கூடம் அகற்றம்: பாமகவினா் போராட்டம்

கரும்பு வரத்துக் குறைவு: திருப்பத்தூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் அரைவை நிறுத்தம்

அரசின் திட்டங்கள் மக்களை முழுமையாகச் சென்றடைய வேண்டும்: கண்காணிப்பு அலுவலா் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT