தூத்துக்குடி மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி செலுத்தும் பணி டிச. 29 முதல் ஜன.28 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்தாா்.
அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தூத்துக்குடி மாவட்டத்தில் கால்நடை உதவி மருத்துவா்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன. நடைபெறும் 8-ஆவது சுற்று கோமாரி நோய்த் தடுப்பூசி செலுத்தும் பணியில் கால்நடை உரிமையாளா்கள் தவறாமல் தங்கள் மாடுகளுக்கு தடுப்பூசி செலுத்தி பயன்பெறவும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 1.10 லட்சம் மாடுகளுக்கு இத்தடுப்பூசி செலுத்தப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டது.