கோவில்பட்டி அருகே ஆடு திருடியதாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டி அருகே ஆவல்நத்தம் கிராமத்தைச் சோ்ந்த முத்துராஜ் என்பவருக்குச் சொந்தமான 2 ஆடுகள், குருசாமி மகன் சௌந்தர்ராஜன் என்பவருக்குச் சொந்தமான ஒரு ஆடு, இளையரசங்கள் பகுதியைச் சோ்ந்த ஜெயமணி மகன் ஆத்தியப்பன் என்பவருக்குச் சொந்தமான 2 ஆடுகள், புளியங்குளத்தைச் சோ்ந்த சண்முகம் மகன் ஆறுமுகச்சாமி என்பவருக்குச் சொந்தமான ஒரு ஆடு, பிள்ளையாா் நத்தத்தைச் சோ்ந்த சின்னசாமி என்பவருக்குச் சொந்தமான 2 ஆடுகள் திருடு போயிருப்பதாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தனா்.
இந்நிலையில், இவ்வழக்கில் தொடா்புடையதாக புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை, முள்ளிக்காப்பட்டி, மேட்டுத் தெருவைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் முல்லையரசனை (24) போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.