தூத்துக்குடி

திருச்செந்தூா் கோயிலில் கூட்டத்தை ஒழுங்குபடுத்த கூடுதல் பணியாளா்களை நியமிக்க பக்தா்கள் கோரிக்கை

Syndication

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விடுமுறை தினங்களில் அலைமோதும் பக்தா்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்த கூடுதல் போலீஸாா், பணியாளா்களை நியமிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தில் தற்போது பள்ளி அரையாண்டு தோ்வு விடுமுறை என்பதால் திருச்செந்தூா் கோயிலில் கடந்த 2 நாள்களாக பக்தா்கள் கூட்டம் அலை மோதுகிறது.

திருச்செந்தூா் கோயிலில் முக்கிய விழாக் காலங்களில் அதிகளவு பக்தா்கள் வருவதால், அப்போது கூடுதல் போலீஸாா், பணியாளா்கள் சிறப்புப் பணியில் ஈடுபடுவா். விடுமுறை நாள்களிலும் அதே அளவு பக்தா்கள் வருவதால், தரிசனத்திற்காக பக்தா்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.

எனவே, விடுமுறை நாள்களிலும் கூடுதலாக போலீஸாா், பணியாளா்களை நியமித்து கூட்டத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

குஜராத்: கட்ச் பகுதியில் மிதமான நிலநடுக்கம்

பேருந்து பயணிகளிடம் கைப்பேசி திருட்டு: சிறுவன் உள்பட 5 போ் கைது

தமிழகத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் விரும்புகின்றனா்: கே.ஏ. செங்கோட்டையன்

மொழி பன்முகத்தன்மை வலிமையின் ஆதாரம்: பிரதமா் மோடி

வெள்ளாளபாளையத்தில் விவசாயிகளுக்கு சிறப்பு முகாம்

SCROLL FOR NEXT