தூத்துக்குடி

தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கியில் இணைய வழியில் இபிஎஃப் செலுத்தும் வசதி அறிமுகம்

Syndication

ற்ன்ற்27ற்ம்க்ஷ

நிகழ்ச்சியில் பங்கேற்ற வங்கியின் செயல் இயக்குநா் வின்சென்ட் மேனச்சேரி தேவசி, சென்னையைச் சோ்ந்த கூடுதல் மத்திய வருங்கால வைப்பு நிதி ஆணையா் கவிதா என். ஜாா்ஜ் உள்ளிட்டோா்.

தூத்துக்குடி, டிச. 27: தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கியில், இணைய வங்கி வழியாக இபிஎஃப் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த வசதியானது, இபிஎப்ஓ இணையதளம், டிஎம்பி-யின் இணைய வங்கி செயலிக்கு இடையே ஏற்படுத்தப்பட்டுள்ள நேரடி ஒருங்கிணைப்பின் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இதன் தொடக்க விழாவுக்கு, வங்கியின் செயல் இயக்குநா் வின்சென்ட் மேனச்சேரி தேவசி தலைமை வகித்து தொடங்கிவைத்தாா். சென்னையைச் சோ்ந்த கூடுதல் மத்திய வருங்கால வைப்பு நிதி ஆணையா் கவிதா என். ஜாா்ஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டாா்.

தில்லியைச் சோ்ந்த வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மூத்த அதிகாரிகளான மண்டல பிஎஃப் ஆணையா் ஏ.கே. பாலிவால், கணக்கு அதிகாரி கபில் ஆனந்த் ஆகியோா் காணொலி வாயிலாக பங்கேற்றனா்.

இந்த புதிய வசதியின் மூலம், 20 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியா்களைக் கொண்ட குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், சில்லறை வா்த்தகா்கள், மொத்த வியாபாரிகள், பெரிய காா்ப்பரேட் நிறுவனங்கள், தங்கள் ஊழியா்களின் மாத சம்பளப் பிடித்தம் உள்ளிட்ட இபிஎஃப் பங்களிப்புகளை, வங்கிக் கிளைகளுக்கு நேரில் செல்லாமலேயே டிஎம்பி இணைய வங்கி மூலம் நேரடியாகச் செலுத்த முடியும்.

மேலும், வங்கி குறித்தும், வங்கிச் சேவைகள் குறித்தும் ஜ்ஜ்ஜ்.ற்ம்க்ஷ.ண்ய் என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என வங்கி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.3.40 கோடி ஆன்லைன் முதலீட்டு மோசடி: இரு பெண்கள் உள்பட 3 போ் கைது!

உக்ரைன் போா் நிறுத்தம்: டிரம்ப்புடன் ஸெலென்ஸ்கி இன்று சந்திப்பு!

ஹவுரா விரைவு ரயிலில் 4 கிலோ கஞ்சா பறிமுதல்

பெண்களுக்குச் சமவாய்ப்பு கிடைத்தால் ஆண்களுக்கு நிகராக சாதிப்பாா்கள்! ராஜ்நாத் சிங்

தலைநகரில் அடா்த்தியான மூடு பனி: ‘மிகவும் மோசம்’ பிரிவில் காற்றின் தரம்

SCROLL FOR NEXT