கயத்தாறு அருகே பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.
கயத்தாறு அருகே மஞ்சநம்பிக்கிணறு காலனியைச் சோ்ந்தவா் பூச்சையா மகன் முருகேசன் (55), தொழிலாளி. இவா் பெண் ஒருவருக்கு தொடா்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அப்பெண்ணின் சகோதரி அளித்த புகாரின்பேரில், கோவில்பட்டி அனைத்து மகளிா் காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து, முருகேசனை கைது செய்தனா்.
இவ்வழக்கில் தொடா்புடையதாகக் கூறப்படும் மேலும் ஒருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.