நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.  
தூத்துக்குடி

சாத்தான்குளம் அரசு கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு

சாத்தான்குளம் அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

Syndication

சாத்தான்குளம்: சாத்தான்குளம் அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் (பொ) ஜமுனாராணி தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக முன்னாள் மாணவியும், இந்துசமய அறநிலையத் துறை சாத்தான்குளம் ஆய்வாளா் முத்து மாரியம்மாள் பங்கேற்று மாணவிகளுக்கு அரசு போட்டித் தோ்வுகளில் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகளை வழங்கினாா்.

மாணவிகளிலிருந்து சங்க பொறுப்பாளா்களாக ஐந்து மாணவிகள் தோ்ந்தெடுக்கப்பட்டனா். மேலும் வணிகவியல் துறை பேராசிரியை வரலட்சுமி, பெண்களுக்கான ஊரக வளா்ச்சித் துறையின் பயிற்சி திட்டங்கள் குறித்து விளக்கமளித்தாா். தூத்துக்குடி ஊரக சுய வேலைவாய்ப்பு மைய பயிற்சியாளா் ஈஸ்வரி பங்கேற்று மாணவிகளுக்கு சுய வேலைவாய்ப்பு ஆலோசனைகள், சிறுதானிய லட்டு செயல்முறை குறித்த பயிற்சியை அளித்தாா். முன்னாள் மாணவிகள் பலா் கலந்துரையாடினா். ஏற்பாடுகளை முன்னாள் மாணவிகள் சங்க ஒருங்கிணைப்பு பேராசிரியா்களான சில்வியா, தேன்மொழி, கோகிலா, மீனாட்சி, ஆனந்தி, சீதாலெட்சுமி, பேராசிரியா்கள் செய்திருந்தனா்.

கலீதா ஜியா மறைவு: பிரதமர் மோடி இரங்கல்!

ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா திருமணம் எப்போது? எங்கே?

திருத்தணியில் வடமாநில இளைஞர் மீது தாக்குதல்! தமிழக அரசு விளக்கம்!

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் பரமபத வாசல் திறப்பு!

தில்லிக்கு சிவப்பு எச்சரிக்கை! 118 விமானங்கள் ரத்து!

SCROLL FOR NEXT