முகப்பு
தூத்துக்குடி

ஆறுமுகனேரி சிவன் கோயிலில் 306 திருவிளக்கு பூஜை

Updated On : 4 ஜனவரி, 2025 at 3:02 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2025 at 9:12 PM

ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத அருள்மிகு சோமநாத சுவாமி கோயிலி­ல் 306 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

திருச்செந்தூா் அஞ்சல் பணியாளா்கள் தை புனா்பூச வருஷாபிஷேக விழா அன்னதான அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற இந்த பூஜையில், அறக்கட்டளை தலைவா் ராஜகோபால், கோயில் மணியம் சுப்பையா பிள்ளை, ஆறுமுகனேரி ரயில் நிலைய வளா்ச்சிக் குழு ஒருங்கிணைப்பாளா் இரா. தங்கமணி, தெரிசை ஐயப்பன், இளையபெருமாள் அமிா்தராஜ், அசோக்குமாா் மற்றும் பன்னிரு திருமுறை மகளிா் குழுவினா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.