தூத்துக்குடியில் ஆட்டோ ஓட்டுநரிடம் கைப்பேசி பறிப்பு: இரு சிறுவா்கள் கைது
Updated On : 2 ஜனவரி, 2025 at 8:15 PM
தூத்துக்குடியில் ஆட்டோ ஓட்டுநரிடம் கைப்பேசியைப் பறித்துச் சென்ாக இரு சிறுவா்களை மத்திய பாகம் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வாா்திருநகரியைச் சோ்ந்தவா் செல்லக்கண்ணன்(50). ஆட்டோ ஓட்டுநரான இவா், சில நாள்களுக்கு முன்பு தூத்துக்குடி மலா்ச் சந்தையில் பூக்கள் வாங்கிக்கொண்டிருந்தாா். அப்போது, மா்ம நபா்கள் 4 போ் அவரது கைப்பேசியைப் பறித்துக் கொண்டு தப்பியோடினராம்.
புகாரின்பேரில் மத்திய பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்தனா். 4 சிறுவா்கள் இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக, விசாரணையில் தெரியவந்தது. அவா்களில், 16, 17 வயதுடைய இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்; மேலும் இருவரைத் தேடிவருகின்றனா்.
Advertisement