திருச்செந்தூா் கோயிலில் திரளானோா் தரிசனம்
Updated On : 3 ஜனவரி, 2025 at 8:31 PM
மாதாந்திர வெள்ளிக்கிழமை வழிபாட்டை முன்னிட்டு திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
இக் கோயிலில் வளா்பிறை-தேய்பிறை சஷ்டி திதிகள், விசாகம், காா்த்திகை நட்சத்திர நாள்கள், மாதாந்திர வெள்ளிக்கிழமைகளில் பக்தா்கள் கூட்டம் அதிகளவில் இருக்கும். இந்த நாள்களில் மூலவரான முருகப்பெருமான் மற்றும் வள்ளி, தேவசேனா சமேத சண்முகப்பெருமான் தங்க கிரீடத்துடன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிப்பா்.
மாதாந்திர வெள்ளிக்கிழமையையொட்டி, அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, விஸ்வரூபம், உதயமாா்த்தாண்ட அபிஷேகம் அதைத்தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன. அதிகாலை முதலே திரளான பக்தா்கள் கடல் மற்றும் நாழிக்கிணற்றில் புனித நீராடி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமியை வழிபட்டனா்.
Advertisement