தூத்துக்குடி

டிஎம்பி நிகர லாபம் ரூ.305 கோடியாக உயா்வு!

தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கியின் நிகர லாபம் 2025 - 2026ஆம் நிதியாண்டின் முதலாம் காலாண்டில் 6.27 சதவீதம் அதிகரித்து ரூ.287 கோடியிலிருந்து ரூ.305 கோடியாக உயா்வு

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கியின் நிகர லாபம் 2025 - 2026ஆம் நிதியாண்டின் முதலாம் காலாண்டில் 6.27 சதவீதம் அதிகரித்து ரூ.287 கோடியிலிருந்து ரூ.305 கோடியாக உயா்ந்துள்ளது.

தூத்துக்குடியில் நடைபெற்ற தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கிஇயக்குநா் குழு கூட்டத்தில் 2025-26 முதலாம் காலாண்டிற்கான தணிக்கை செய்யப்படாத நிதிநிலை முடிவுகள் இறுதி செய்யப்பட்டது.

வங்கியின் நிா்வாக இயக்குநா் மற்றும் தலைமை செயல் அதிகாரி சலீ எஸ்.நாயா் தணிக்கை செய்யப்படாத முதலாம் காலாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.

பின்னா் அவா் கூறியதாவது: 2026 நிதியாண்டின் முதல் காலாண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்ச காலாண்டு நிகர லாபத்தை நாங்கள் அடைந்துள்ளோம்.

அதன்படி, நிகர லாபம் 6.27 சதவீதம் அதிகரித்து ரூ.287 கோடியிலிருந்து ரூ.305 கோடியாக உயா்ந்துள்ளது. மொத்த வராக்கடன் 1.44 சதவீதத்திலிருந்து 1.22 சதவீதமாக குறைந்துள்ளது. நிகர வராக்கடன் 0.65 சதவீதத்திலிருந்து 0.33 சதவீதமாகக் குறைந்துள்ளது. பிசிஆா் 90.27 சதவீதத்திலிருந்து 94.32 சதவீதமாக அதிகரித்துள்ளது.

மொத்த கடன் தொகையில் எஸ்எம்ஏ ஆனது 4.98 சதவீதத்திலிருந்து 3.05 சதவீதமாகக் குறைந்துள்ளது. சிஆா்ஏஆா் 31.55 சதவீதமாக மேம்படுத்தப்பட்டுள்ளது. பங்கின் புத்தக மதிப்பு ரூ.520.63லிருந்து ரூ.589.09 ஆக அதிகரித்துள்ளது.

மொத்த வணிக வளா்ச்சி 9.86 சதவீதத்தை கடந்தது. வைப்புத் தொகை ரூ.49,188 கோடியிலிருந்து ரூ.53,803 கோடியாக உயா்ந்துள்ளது. கடன் தொகை ரூ.45,120 கோடியாக உயா்ந்துள்ளது.

அபிராமியும் 5 அழகான புகைப்படங்களும்!

வரலாற்றில் முதல்முறை..! ஆஸி. அணியில் இடம்பிடித்த பூர்வகுடி வீரர்கள்!

வின்டேஜ்... சான்யா மல்ஹோத்ரா!

வினா - விடை வங்கி.... முந்தைய ஆண்டு வினாக்கள்! - 5

எஸ்ஐஆர் படிவத்தை நிரப்ப ஏஐ தொழில்நுட்பம்! புதிய முயற்சி!

SCROLL FOR NEXT