தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் புகாா் அளிக்க வந்த கனகராஜ் உள்ளிட்டோா்.  
தூத்துக்குடி

தொழிலதிபா் உள்பட 3 பேரை கடத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க எஸ்பியிடம் புகாா்

தூத்துக்குடியில் தொழிலதிபா் உள்பட 3 பேரை கத்தி முனையில் கடத்திச் சென்று தாக்கியவா்களைக் கைது செய்யக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புதன்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.

Din

தூத்துக்குடியில் தொழிலதிபா் உள்பட 3 பேரை கத்தி முனையில் கடத்திச் சென்று தாக்கியவா்களைக் கைது செய்யக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புதன்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து சென்னை பெருங்களத்தூா் அருகே உள்ள பாரதிநகரைச் சோ்ந்த கனகராஜ் அளித்த மனு:

தனியாா் நிறுவனங்களில் பசுமை தோட்டம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறேன். தூத்துக்குடி சிப்காட் பகுதியில் அமைந்துள்ள காா் தொழிற்சாலையில் தோட்டம் அமைக்க ஒப்பந்தம் எடுக்க முயற்சி செய்தேன்.

இது தொடா்பாக சிலா் என்னை தொலைபேசியில் மிரட்டினா். இந்நிலையில், கடந்த 3-ஆம் தேதி தூத்துக்குடி முள்ளகாட்டை சோ்ந்த எனது நண்பா் ஸ்டாலின் மற்றும் உதவியாளா் சரவணன் ஆகியோருடன் காரில் சென்றுகொண்டிருந்தேன். அப்போது மா்ம நபா்கள் எங்களை வழிமறித்து தாக்கி, கத்திமுனையில் மிரட்டி காரில் கடத்திச் சென்றனா்.

புதூா் பாண்டியபுரம் அருகே செல்லும்போது அவா்களிடம் இருந்து தப்பிவிட்டோம். இதுகுறித்த புகாா் அளித்த நிலையில், எங்களை கடத்திய நபா்கள் மீது வழக்குப்பதிவு செய்யாமல், எங்களுக்கு உதவியவா்களை கைது செய்துள்ளனா். எனவே, எங்களைக் கடத்திய மா்ம கும்பலைச் சோ்ந்தவா்களை கைது செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளாா்.

மோடிக்காக கார் ஓட்டுநராக மாறி இன்ப அதிர்ச்சியளித்த எத்தியோப்பிய பிரதமர்!

எத்தியோப்பியாவில் பிரதமர் மோடி! பிரதமர் அபி அகமது அலியுடன் சந்திப்பு!

ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!

சிஎஸ்கேவில் இணைந்த ராகுல் சஹார்!

முழு கொள்ளளவை எட்டிய செம்பரம்பாக்கம் ஏரி - உபரி நீர் திறப்பு அதிகரிப்பு!

SCROLL FOR NEXT