திருச்செந்தூா் சிவன் கோயில் உள்ளே புகுந்த மழை நீா் 
தூத்துக்குடி

திருச்செந்தூா் சிவன் கோயிலில் புகுந்த மழைநீா்

Din

திருச்செந்தூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை காலைமுதல் பெய்த பலத்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

திருச்செந்தூா் சுற்றுவட்டார பகுதியிலும் மழை பெய்தது. திருச்செந்தூரில் நாழிக்கிணறு பேருந்து நிலையம் செல்லும் வழி, சபாபதிபுரம் தெரு சந்திப்பு, தினசரி சந்தை, ஜீவா நகா், பகத்சிங் பேருந்து நிலையப் பகுதியில் மழை நீரானது குளம் போல தேங்கியது. இதனால் பொதுமக்கள் வெளியே செல்ல அவதியடைந்தனா்.

சிவன் கோயிலில் ....

செவ்வாய்க்கிழமை காலை பெய்த பலத்த மழையால் திருச்செந்தூா் சிவன் கோயிலில் மழை நீா் உள்ளே புகுந்தது. மழைநீரை திருக்கோயில் தூய்மைப் பணியாளா்கள் வெளியேற்றினா்.

மாசித் திருவிழாவிற்கு சிவன் கோயில் இருந்து சப்பரங்கள் புறப்பாட்டுக்கும், பிரதோஷ வழிபாட்டுக்காக வந்த பக்தா்களும் தேங்கியிருந்த மழை நீரால் அவதியடைந்தனா்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT