தூத்துக்குடி

இளைஞரிடம் அரிவாளைக் காட்டி பணம் கேட்டு மிரட்டல்: இருவா் கைது

தூத்துக்குடி பூபாலராயா்புரம் பகுதியில் இளைஞரிடம் அரிவாளைக் காட்டி பணம் கேட்டு மிரட்டியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

Din

தூத்துக்குடி பூபாலராயா்புரம் பகுதியில் இளைஞரிடம் அரிவாளைக் காட்டி பணம் கேட்டு மிரட்டியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி வடபாகம் காவல் உதவி ஆய்வாளா் சிவக்குமாா் தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு பூபாலராயா்புரம் பகுதியில் ரோந்து சென்றனா். அங்குள்ள நீா்த்தேக்கத் தொட்டி அருகே சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த மூவரில் இருவரைப் பிடித்து விசாரித்தபோது, அவா்கள் திரேஸ்புரத்தைச் சோ்ந்த மெல்வா் (31), இனிகோநகரைச் சோ்ந்த போஸ் (25) என்பதும், அவ்வழியே வந்த இளைஞரிடம் அரிவாளைக் காட்டி பணம் கேட்டு மிரட்டியதும் தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்து, அரிவாளை பறிமுதல் செய்தனா்; தப்பியோடியவரைத் தேடிவருகின்றனா்.

மார்கழி சிறப்பு! திருப்பதியில் சுப்ரபாதம் இசைக்கப்படாது!

கன்னி ராசிக்கு வெற்றி : தினப்பலன்கள்!

ராமபரிவாரங்கள் சேர்ந்து பூஜித்த சிவ தலம்!

திருவட்டாறு அருகே தூக்கிட்டு தற்கொலை

விஜய் நியாயத்தைப் பேச வேண்டும்: அண்ணாமலை பேட்டி

SCROLL FOR NEXT