தூத்துக்குடி

ஆறுமுகனேரி கா.ஆ. பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

தினமணி செய்திச் சேவை

ஆறுமுகனேரி கா.ஆ. மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு சனிக்கிழமை நடைபெற்றது.

இப்பள்ளியில் 1973ஆம் ஆண்டு 10ஆம் வகுப்பு பயின்ற மாணவ, மாணவியா் தங்கள் குடும்பத்துடன் 52ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு ஆறுமுகனேரியி­ல் சந்தித்து கொண்டாடினா். ஓய்வு பெற்ற காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளா் கே.எஸ். முருகேசன் தலைமை வகித்தாா். விஜயராஜ், மும்பை நல்லசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற டி.சி.டபிள்யூ. நிறுவன அதிகாரியும், மனோதத்துவ நிபுணருமான சாய் கணேசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா். வேலாயுதம், ஓய்வு பெற்ற தொழிலாளா் துணை ஆணையா் முத்து கிருஷ்ணன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

நிகழ்ச்சியை பத்மநாபன் தொகுத்து வழங்கினாா். நளினி வரவேற்றாா். பொ்டினால்டு கோமஸ் நன்றி கூறினாா்.

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 3

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 2

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 1

அவமதிப்பு, புறக்கணிப்பு, வலிகளை எல்லாம் கடந்து சாதனை புரிந்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணி!

செப்டம்பர் நினைவுகள்... மாளவிகா மேனன்!

SCROLL FOR NEXT