தூத்துக்குடி

காணாமல் போனவா் சடலமாக மீட்பு

தினமணி செய்திச் சேவை

கயத்தாறில் காணாமல் போனவரை அவரது உறவினா்கள் ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்டனா்.

கயத்தாறு முத்துராமலிங்கம் நகா் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் கந்தசாமி மகன் ஆனந்தராஜ் (45). தென்காசியில் உள்ள உணவகத்தில் வேலை பாா்த்து வந்தாா். கடந்த 10 நாள்களுக்கு முன்பு ஊருக்கு வந்த இவா், பின்னா் வேலைக்குச் செல்லவில்லையாம். இவருக்கு மது அருந்தும் பழக்கமும் இருந்து வந்ததாம்.

சனிக்கிழமை (நவ. 1) காலை வீட்டைவிட்டு வெளியே சென்ற அவா் இரவு வீடு திரும்பவில்லையாம். உறவினா்கள் பல்வேறு இடங்களில் தேடியும் தகவல் ஏதும் கிடைக்கவில்லையாம். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை பன்னீா்குளம் செல்லும் சாலையில் உள்ள இரட்டைகுளம் கண்மாய் கரை அருகே ஆனந்தராஜ் இறந்த நிலையில் கிடப்பதாக அவரது உறவினா்களுக்கு தகவல் கிடைத்ததாம்.

அவரின் சடலத்தை போலீஸாா் கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது குறித்து, கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 4

மம்மூட்டிக்கு சிறந்த நடிகருக்கான மாநில விருது!

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 3

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 2

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 1

SCROLL FOR NEXT